Sunday, June 26, 2022

சின்னக் கண்ணன்….

 சின்னச் சின்ன கண்ணனாம்

சிங்காரக் கண்ணனாம்….

சிந்தையிலே சிரிப்புதனை வெளிப்படுத்தும்

சிறப்பான கண்ணனாம்….

 

அன்பு என்னும் பண்பை

அனைவரிடமும் காட்டியே

அரவனைத்துச் சென்றிடும்

அழகான கண்ணனாம்……

 

கல்வியின் மீது நாளுமே

கவனத்தை செலுத்தியே

கற்கண்டாய் படித்திடும்

கனிவான கண்ணனாம்….

 

நண்பர் குழாம் சூழவே

நாளும் திகழ்ந்திடும்

நர்த்தன கண்ணனாம்

நம்பிக்கையான கண்ணனாம்….

Sunday, November 15, 2009

புதிய ஆத்திச்சூடி

அ - அன்பாய் இரு
ஆ - ஆளுமை பெறு
இ - இன்பம் கொள்
ஈ - ஈகை கடைபிடி
உ - உழைப்பைப் போற்று
ஊ - ஊக்கம் கொள்
எ - எளிமை கடைபிடி
ஏ - ஏற்றம் பெறு
ஐ - ஐயம் தெளிவு
- ஒற்றுமையாய் இரு
ஓ - ஓய்வை பயன்படுத்து
ஔ - ஔவியம் கொள்ளாதே